---Advertisement---

அரசு பேருந்தில் பிறந்த பெண் குழந்தை… வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பாஸ்…!

By Sri
Published on: August 20, 2024
---Advertisement---

தெலுங்கானா மாநிலத்தில் அண்ணனுக்கு ராக்கி கட்டி விட வேண்டும் என்பதற்காக நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் அரசு பேருந்தில் பயணம் செய்திருக்கின்றார். அப்போது அவருக்கு திடீரென்று வலி ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் பேருந்தில் பயணித்த ஒரு செவிலியர் நடத்துனர் பாரதியுடன் இணைந்து கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்திருக்கின்றார்.

அந்த கர்ப்பிணிக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தாய் மற்றும் பிறந்த குழந்தையின் உடல் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் பேருந்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் இலவச பயண பஸ் பாஸ் ஒன்றை தெலுங்கானா அரசு போக்குவரத்து கழகம் வழங்கி இருக்கின்றது. மேலும் பிரசவத்திற்கு உதவி செய்த செவிலியர் அலிவேலு மங்கம்மாவுக்கும் ஓராண்டுக்கு இலவச பயணம் செய்யும் பாஸ் வழங்கப்பட்டிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க