---Advertisement---

முகக்கவசம் அணிவது கட்டாயம் அதிரடியில் இறங்கியுள்ள தமிழக மாநகராட்சிகள்

By Sri
Published on: April 15, 2020
Mask images
---Advertisement---

இந்தியாவில் இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளை மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொது இடங்களிலும், அலுவலகங்களிலும், முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடக்கூடாது என்றும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் என்று பல்வேறு அதிரடி நிபந்தனைகளை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து, தமிழகத்தில், ‘சேலம் மாநகராட்சிப் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் அணிவது நாளை முதல் கட்டாயமாகிறது என்றும், மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சென்னையிலும் மாஸ்க் அணியாமல் தெருவில் நடந்தால் ரூபாய் 100 அபராதம் விதிக்கப்படும், முகக்கவசம் அணியாமல் வாகனத்தில் சென்றால் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், முகக்கவசம் இல்லாதுப்பட்சத்தில், கைக்குட்டை, துப்பட்டா, துண்டு ஆகியவற்றை முகக்கவசமாகப் பயன்படுத்ததலாம் என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணிவது கட்டாயம் என பல்வேறு மாவட்டங்களில் கடுமையாக்கி வருகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shiva Nirvana addressing recent cinematic collaboration rumors.

தனுஷ் இயக்கத்தில் புதிய படமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் శిவ நிர்வாண!

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!

Conceptual graphic representing the theatrical rights acquisition of the film Drones by 5 Star Senthil.

டிபிக்கல் கலகலப்பான என்டர்டெய்னராக வரும் ‘ட்ரோன்ஸ்’: ஆல் இந்தியா தியேட்டரிக்கல் உரிமையை கைப்பற்றிய 5 ஸ்டார் செந்தில்!

Official announcement poster for Kamal Haasan's upcoming action film directed by SU Arun Kumar.

கமல்ஹாசன் – எஸ்.யூ. அருண்குமார் கூட்டணி: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாஸ் ஆக்‌ஷன் படம் – மிரட்டலான தோற்றம்!

Conceptual graphic representing Suriya's upcoming high-profile projects including Lokesh Kanagaraj's Rolex spin-off and H Vinoth's film.

சூர்யா 50 லோகேஷ் கனகராஜ் கூட்டணி: மிரட்டலான ‘ரோலக்ஸ்’ ஸ்பின்-ஆஃப் மற்றும் சூர்யா 49 லேட்டஸ்ட் மாஸ் அப்டேட்!