தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) தனது அடுத்த திரைப்படத்திற்காக இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் (SU Arun Kumar) உடன் கை கோர்த்துள்ளார். முழுமையான கமர்ஷியல் ஆக்ஷன் கதைக் களத்தில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தோ வாரேன் 🔥@ikamalhaasan #SUArunkumar#KamalHaasan #Mahendran@RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/1GMUOdcSH6
— Raaj Kamal Films International (@RKFI) September 3, 2026
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சித்தா’ மற்றும் ‘வீர தீர சூரன்’ போன்ற வித்தியாசமான மற்றும் வெற்றிகரமான படங்களை வழங்கிய இயக்குநர் அருண்குமாருடன் கமல் இணைவது சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டெஸ்ட் ஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், படக்குழு தற்போது மிரட்டலான முதல் பார்வையை வெளியிட்டுள்ளது. நீண்ட தாடி மற்றும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், கையில் அரிவாளுடன் கமல் தோன்றும் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.













