தமிழ் திரையுலகின் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் (Kamal Haasan) தனது அடுத்தடுத்த திரைப்படத் தேர்வுகளில் மிகப்பெரிய ஆச்சரியங்களை வழங்கி வரும் நிலையில், பிரபல இயக்குநர் சு. அருண் குமார் (S.U. Arun Kumar) இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
‘சித்தா’ மற்றும் ‘வீர தீர சூரன்’ போன்ற மிகப்பெரிய வெற்றித் திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த சு. அருண் குமார் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ (Sandiyar) எனப் பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (Raaj Kamal Films International) நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் இத்திரைப்படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
SANDIYAR
சண்டியர் 🔥#KamalHaasan #SUArunkumar
#Sandiyar #சண்டியர்
#SandiyarSambavam #HappyBirthdayKamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan
@ikamalhaasan #Mahendran @anirudhofficial @anbariv #SunilKS @amritharam2 #CSBalachandar @AKunjamma @RohanShrestha @RKFI @turmericmediaTM @magizhmandram @APIfilms @homescreenent
— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2026
முற்றிலும் மதுரைக் களப்பின்னணியில், சிஜிஐ (CGI) மற்றும் வழக்கமான டான்ஸ் சீக்வென்ஸ்கள் ஏதுமின்றி மிகவும் இயல்பான மற்றும் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இக்கதைக்களம் உருவாக்கப்படவுள்ளது. ‘தோ வாரேன்’ (Tho Vaaren) என்ற மாஸ் கேப்ஷனுடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டெஸ்ட் ஷூட் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.













