---Advertisement---

ஊரடங்கு காலத்தில் சாராய விற்பனை! திரௌபதி பட துணைநடிகர் கைது!

By Sri
Published on: April 20, 2020
---Advertisement---

ஊரடங்கு நேரத்தில் சென்னையில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்ற சினிமா துணை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். அந்த தவிப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஆங்காங்கே திருட்டுத் தனமாக மதுபாட்டில்கள் 10 மடங்கு வரை அதிகவிலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது சம்மந்தமாக நடந்த சோதனையில் சென்னையில் துணை நடிகர் ஒருவரும், ஓட்டுனர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர் நகர் போலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா மெயின் ரோட்டில் துணை நடிகர் ரிஸ்வான் என்பவரிடம் இருந்து 57 குவார்ட்டர் பாட்டில்கள்,  12 பீர் பாட்டில்கள், ரூ.2300 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பிய திரௌபதி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் அளித்த தகவலின் படி பிரதீப் மற்றும் ஓட்டுனர் தேவராஜ் ஆகியோரிடம் இருந்து மது பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் சினிமா வட்டாரத்தில் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் சரக்குகளை 1000 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!