---Advertisement---

மகளிர் உரிமைத் தொகை… இந்த வதந்திகளை யாரும் நம்பாதீங்க… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

By Sri
Published on: August 17, 2024
---Advertisement---

மகளிர் உரிமைத் தொகை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் மகளிர்க்கு உரிமை தொகை ஆயிரம் வழங்கும் திட்டம். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றது. நவம்பர் மாதம் இரண்டாவது கட்டமாக விடுபட்ட பெண்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக whatsapp உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உரிமைத்தொகைக்காக விடுபட்ட பெண்களின் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளதாகவும், பெறப்படும் விளம்பரங்கள் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற போஸ்டர் வைரலாகி வந்தது.

அதனை பார்த்த மக்கள் உண்மையான நம்பி திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கேயம், பெருமாநல்லூர், கேவிஆர் நகர், அவிநாசி, முதல் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு ஏராளமான பெண்கள் வருகை தந்தனர். பின்னர் தான் அது போன்ற முகாம்கள் எதுவும் நடக்கவில்லை என்பது தெரிய வந்தது.

கலெக்டர் அலுவலக அதிகாரிகள் இதனை கூறினாலும் பெண்கள் தொடர்ந்து காத்திருந்தனர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வேண்டுகோள் விடுத்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற போஸ்டர் போன்ற whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு மக்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.