---Advertisement---

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்… வானிலை எச்சரிக்கை…!

By Sri
Published on: August 19, 2024
---Advertisement---

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 33 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருச்சி, பெரம்பலூர், தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

மேலும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.