---Advertisement---

மின் கட்டண உயர்வு…அதிருப்தி தெரிவித்த டிடிவி தினகரன்…கண்டன அறிக்கை வெளியீடு…

Published on: July 16, 2024
TTV Dinakaran
---Advertisement---

எதிர்க் கட்சித்தலைவராக இருந்த போது மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை இருளில் மூழ்கடித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எதிர்த்த ஸ்டாலின் முதல்வர் ஆன போது அதே மின் கட்டணத்தை உயர்த்தி அதே தவறை செய்து வருகிறார் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் அறிக்கையில் 221வது வாக்குறுதியாக கொடுத்திருந்த மாதம் தோறும் மின் கட்டண மீதான நடவடிக்கையை எடுக்காமல் மின் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என் டி.டி.வி.தினகரனை சாடியுள்ளார்.

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் விழி பிதிங்கி நிற்கும் பொது மக்கள் இந்த மின் கட்டண உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொல்லியிருக்கிறார்.

Electricity
Electricity

கடந்த 2022ம் ஆண்டு கட்டணத்தை முப்பது சதவீதமும் (30%), 2023ம் ஆண்டு மின் கட்டணத்தி இரண்டு புள்ளி ஒன்னு எட்டு சதவீதமாக (2.18%)உயர்த்தப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார் தினகரன்.

தற்போது மின் கட்டணம் மீண்டும் நாலு புள்ளி எட்டு மூனு (4.83%) சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலின் போது மின் கட்டண உயர்வை பற்றி வந்த செய்திகளை மறுத்த திமுக அரசு இப்போது மின் கட்டண உயர்வை ஏற்படுத்து பொது மக்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சொல்லியிருக்கிறார்.

மின்சார நிலைக் கட்டணம் மற்றும் உச்ச நேர மின் கட்டணத்தால் பல்வேறு சிறு, குறு, நடுத்தர தொழில் நிலையங்கள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் இந்த மின் கட்டண உயர்வு, மேலும் அதிக நிறுவனங்களை மூடச்செய்து விடும் என்பதால் இந்த மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Mari Selvaraj and legendary composer Ilaiyaraja in a file photo.

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’: காயது லோஹர், பிரியங்கா மோகன் மற்றும் இசைஞானி இளையராஜா குறித்து இயக்குநர் மனம் திறப்பு!

Prominent Kollywood directors Mohan Raja and Shakthi Soundar Rajan working on sequel scripts.

தனி ஒருவன் 2 மற்றும் மிருதன் 2: மிரட்டலான சீக்வெல் படங்களின் ஸ்கிரிப்ட் பணிகள் தீவிரம்!

Actor Karthi and director PS Mithran discussing a scene during the production of Sardar 2.

சர்தார் 2 புதிய ஜானர் படம்: இயக்குனர் பி.எஸ். மித்ரன் மற்றும் நடிகர் கார்த்தியின் சுவாரஸ்யமான பேட்டி!

Official announcement banner featuring Keneeshaa's musical debut for An Ordinary Man.

கெனிஷாவின் மியூசிக் டெப்யூ: ரவி மோகன் இயக்கத்தில் ‘அன் ஆர்டினரி மேன்’ – நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டுத் தகவல்!

Official first look poster for Shivarajkumar's upcoming film Picasso.

ஹட்ரிக் நாயகன் சிவராஜ்குமாரின் ‘பிகாசோ’: மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Official promotional still released by RKFI revealing Seeman's appearance in Seyon.

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைகிறார் செந்தமிழன் சீமான்!