---Advertisement---

Stop Blaming Ticket Prices! — “முதல்ல பாப்கார்ன் விலைய குறையுங்க!” — தியேட்டர் உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் கொடுத்த அதிரடி கவுண்டர்!

Published on: May 14, 2026
Naga Vamsi's quote about audience attendance and popcorn prices.
---Advertisement---

திரைப்படங்கள் தியேட்டர்களில் சரியாக ஓடாததற்குக் டிக்கெட் விலையை தயாரிப்பாளர்கள் உயர்த்துவது தான் காரணம் எனத் தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னணித் தயாரிப்பாளர் நாக வம்சி (Naga Vamsi) இதற்கு மிகவும் காட்டமான மற்றும் எதார்த்தமான ஒரு பதிலடியைக் கொடுத்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.

டிக்கெட் உயர்வு ஒரு பிரச்சனையே இல்லை

நாக வம்சி தனது கருத்தில், “டிக்கெட் விலையை 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்த்துவதால் மட்டுமே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதைத் தவிர்ப்பதில்லை” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஒரு நல்ல படத்தைப் பார்க்க ரசிகர்கள் அந்தத் தொகையைச் செலவு செய்யத் தயாராகவே இருக்கிறார்கள் என்பது அவரது வாதம். ஆனால், தியேட்டருக்குள் நுழைந்த பிறகு அவர்கள் சந்திக்கும் மற்ற செலவுகள் தான் அவர்களை முகம் சுளிக்க வைக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாப்கார்ன் மற்றும் ஆன்லைன் கட்டணங்களே வில்லன்

தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்ன் மற்றும் கூல் டிரிங்ஸ் (Popcorn and Cool Drinks) ஆகியவற்றின் விலை மிகவும் அதிகமாக இருப்பதே மக்கள் தியேட்டருக்கு வராமல் இருப்பதற்குக் முக்கிய காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வசூலிக்கப்படும் BookMyShow வசதிக்கான கட்டணங்களும் (Convenience fees) ரசிகர்களுக்குப் கூடுதல் சுமையாக இருக்கிறது. “இவற்றை முதலில் குறைப்பதற்கு முயற்சி செய்யுங்கள், அதன் பிறகு டிக்கெட் விலையைப் பற்றிப் பேசலாம்” எனத் தியேட்டர் உரிமையாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த விஷயம் தற்போது சினிமா வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெரும்பாலான ரசிகர்கள் நாக வம்சியின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தியேட்டர் கேன்டீன்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே நடுத்தரக் குடும்பங்கள் மீண்டும் தியேட்டர்களை நோக்கி வரும் என்பது நிதர்சனமான உண்மையாக உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Suriya in a police role for Jithu Madhavan's upcoming film Suriya 47

இதுதான் சூர்யா 47-ன் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ்! படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஏன் இன்னும் வெளியாகவில்லை? – மனம் திறந்த இயக்குநர் ஜித்து மாதவன்!

Jr NTR as Lord Murugan in the upcoming mythological epic God of War directed by Trivikram Srinivas.

இது தெய்வீக சர்ப்ரைஸ்! ‘காட் ஆஃப் வார்’ படத்தில் முருகப்பெருமானாக ஜூனியர் என்டிஆர்.. திரிவிக்ரம் இயக்கும் பிரம்மாண்ட புராணக் காவியம் இதோ!

Preity Mukundhan in action mode for Blast and soft look for Idhayam Murali.

இது ‘பிளாஸ்ட்’ ஆக்‌ஷன் vs ‘இதயம் முரளி’ ரொமான்ஸ்! பிரீத்தி முகுந்தனின் லேட்டஸ்ட் அப்டேட்.. இந்த இரண்டு ரோல்களுக்கு இடையே இவ்வளவு வித்யாசமா?

Ram Pothineni at the pooja ceremony for his directorial debut RAPO23

இது ராம் போதினேனியின் ‘லோன் வுல்ஃப்’ ஜர்னி! இயக்குனராக களமிறங்கும் ராம்.. ‘RAPO23’ படத்தின் பிரம்மாண்ட பூஜை மற்றும் மிரட்டலான டீடெயில்ஸ்!

Suriya48 pooja ceremony with director T.J. Gnanavel.

இது ‘ஜெய் பீம்’ மாஸ்டர் பீஸ்! சூர்யா48-ன் பிரம்மாண்ட பூஜை இன்று! ‘5 ரூபாய் டாக்டர்’ கதைக்களத்தில் மிரட்ட வரும் சூர்யா – டி.ஜே. ஞானவேல் கூட்டணி!

Actor Suriya recording a song for the movie Vishwa and Sons directed by Venky Atluri.

இது சூர்யாவின் ‘வாய்ஸ் மாஸ்’! ‘விஸ்வா அண்ட் சன்ஸ்’ படத்திற்காக சூர்யா பாடிய டான்ஸ் நம்பர்.. கென் கருணாஸ் எழுதிய வைரல் வரிகள்!