---Advertisement---

மருத்துவமனையில் இருந்த கொரோனா பாதிக்கப்பட்ட இளைஞர்! தப்பியோடியதால் பரபரப்பு!

By Sri
Published on: April 9, 2020
---Advertisement---

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் தப்பியோடியதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று மாலை மேலும் 48 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 ஆக உயந்துள்ளதாகவும், இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விழுப்புரம் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 30 வயதான டெல்லியை சேர்ந்த நபர் தப்பியோடியதாக செய்திகள் வெளியாகிறது.

அவர் டெல்லியில் இருந்து விழுப்புரத்துக்கு ஒரு நேர்காணலுக்காக வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க