---Advertisement---

ஒரு வாரம் கடுமையான ஊரடங்கு- அமல்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்

Published on: May 22, 2021
---Advertisement---

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது தினசரி பாதிப்பு பாதித்த முதல் நாள் 19,000த்தில் இருந்து 33000ல் இருந்து தற்போது அதிரடியாக ஏறி 36000த்தை நெருங்கி விட்டது.

தற்போது ஊரடங்கு என்பது காலை 6 மணி முதல் 10 மணி வரை மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டு 10 மணிக்கு மேல் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இருப்பினும் ஊரடங்கில் தளர்வுகள் அதிகமாக உள்ளது சரியான ஊரடங்கு இல்லை என மக்களாலும் எதிர்க்கட்சிகளாலும் கூறப்பட்டு வரும் நிலையில், வரும் 24 முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு விதிக்கப்படுகிறது. மக்கள் வெளியில் நடமாட இதனால் அனுமதி இல்லை. பால், மருந்து, பெட்ரோல் பங்க் மட்டும் செயல்படும் என தெரிகிறது.

இது குறித்த முதல்வர் ஸ்டாலினின் அறிக்கை.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்தியாவில், தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து இரண்டாவது அலையாக கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை அதிகரித்து தற்பொழுது நாளொன்றுக்கு சுமார் 36,000 என்ற அளவிற்கு புதிய தொற்றுகள் பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் 21.05.2021- ஆம் நாள் கணக்கீடுபடி, தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 2.74 லட்சமாக உள்ளது.

தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, கடந்த 10.05.2021 காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும், 09.05.2021 அன்றுநடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலும், கரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், 13.05.2021அன்று நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த விவாதிக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இது மட்டுமன்றி, 14.05.2021 அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் நோய்ப் பரவலைத் தடுக்க 15.05.2021 காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

மேலும், கடந்த 20.05.2021, 21.05.2021 ஆகிய நாட்களில், சேலம், திருப்பூர், கோயம்புத்துhர், மதுரை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கரோனா நோய்த் தடுப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, நோய்த் தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

தமிழ்நாட்டில் கரேனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், புதிதாக கரோனா நோய்த் தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்படுவதோடு, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் மருத்துவமனைகளிலும், கரோனா தடுப்பு மையங்களிலும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்சிஜன் வழங்குவதற்கும் அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. நம் மாநிலத்தில், நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நோய்த் தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோய்த் தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக, இன்று (22.05.2021), அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடத்திய கலந்தாலோசனை கூட்டத்தில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், பொது மக்கள் அனைவரும் ஒத்துழைத்து, ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நோய்த் தொற்று பரவலைக் குறைக்க முடியும் என்பதால், ஏற்கனவே 13.05.2021 அன்று மக்கள் பிரநிதிகளான அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்றை நடத்தி, அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களால் முன்மொழியப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு குழு ஒன்றை இந்த அரசு அமைத்தது.

இதனைத் தொடர்ந்து இன்று (22.05.2021) இந்தக் குழுவுடன் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கலந்து ஆலோசித்தபோது, அவர்கள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற வகையில், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து, கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள் துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சட்டமன்ற கட்சி தலைவர்கள் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளின்படியும், தற்போது 10.05.2021 காலை 04.00 மணி முதல் 24.05.2021 காலை 04.00 மணி முடிய அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும்
· இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும். இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

· மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்
· பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்
· பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்
· தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்
· தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
· மின்னணு சேவை (நு-உடிஅஅநசஉந) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம்.
· உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
Swiggy, Zomato போன்ற மின் வணிகம் ((e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்
· பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்
· ஏ.டி.எம். மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
· வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்
· சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.
· உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்
· மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவுதேவையில்லை.
· செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
· தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.
பொது
· பொது மக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9-00 மணிவரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
· மால்கள் திறந்திட அனுமதி கிடையாது.
· வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021) மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும். மேலும், கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!

Official promotional poster for the sports docu-drama Gladiator featuring Ajith Kumar and Thalapathy Vijay.

அஜித் – விஜய் இணையும் ‘கிளாடியேட்டர்’ ஆவணப்படம்: நவம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!