---Advertisement---

மாணவச்செல்வங்கள் தற்கொலை முடிவை எடுப்பது துயரத்தை தருகிறது- முதல்வர் எடப்பாடி

Published on: September 12, 2020
---Advertisement---

மதுரை தல்லாகுளம் போலீஸ் குவார்ட்டர்ஸில் வசித்து வரும் எஸ்.ஐ முருகசுந்தரம் என்பவரின் மகள் ஜோதிஸ்ரீ துர்கா இன்று நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

eps

நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக விலக்க வேண்டும் என கூறி வருகின்றனர். குறிப்பாக அந்த மாணவியின் கடைசி நேர ஆடியோ கொஞ்சம் கலக்கத்தை அதிகமூட்டுகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த செல்வி.ஜோதிஸ்ரீ துர்கா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம். என முதல்வர் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க