---Advertisement---

கருணாநிதி நினைவு தினம் தந்தை படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு க ஸ்டாலின்

By Sri
Published on: August 7, 2024
---Advertisement---

மறைந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதல்வர் மு க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக கட்சியின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

இதை தொடர்ந்து சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதல் வரும் மு க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணி ஓமந்தூர் வளாகத்தில் தொடங்கி காமராஜர் சாலை வழியாக மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கருணாதி அவர்களின் நினைவிடத்தில் நிறைவு பெற்றது.

இந்த பேரணியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் அமைச்சர் உதயநிதி கனிமொழி எம்பி மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பேரணியின் நிறைவாக மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா சமாதி மற்றும் கருணாநிதி சமாதிக்கு மலர்களையும் வைத்து முதல்வர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.