---Advertisement---

தினமும் இரண்டுமணிநேரம் டாஸ்மாக்! நீதிபதிகள் தடாலடி முடிவு!

By Sri
Published on: April 17, 2020
---Advertisement---

தமிழகத்தில் தினமும் இரண்டு மணிநேரமாவது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வேண்டும் என்ற மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 21,00,000 ஐ  தாண்டியுள்ளது. இந்தியாவில் 12500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. முதலில் அறிவித்த ஏப்ரல் 14 அன்று முடிந்த நிலையில் மேலும் 20 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் மதுவுக்கு அடிமையானவர்கள் குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் போதைக்காக கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் போன்ற அபாயகரமான பாதை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் தினமும் இரண்டு மணிநேரம் கடை திறக்க வேண்டும் என சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வசந்த் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் ‘ஊரடங்கின் போது மது கிடைக்க வழி செய்யும் கேரள மற்றும் அஸ்ஸாம் மாநில அரசுகளின் உத்தரவை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது’ எனக் கூறிய வாதத்தை ஏற்று நீதிபதிகள் அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!