---Advertisement---

இபிஎஸ் மீது பறந்து வந்து விழுந்த செல்போன்… அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு…!

By Sri
Published on: October 1, 2024
---Advertisement---

அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் மீது செல்போன் விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. சில இடங்களில் டெபாசிட் இழந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் வருகிறது 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி என்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டை தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். கடந்த காலங்களில் அதிமுக தொடர்ந்து தக்க வைத்திருந்த 40 சதவீத வாக்கு வங்கியை சுட்டிக்காட்டினார்.

தற்போது 10 சதவீத வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. இழந்த வாக்குகளை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் எல்இடி டிஜிட்டல் விளம்பர பலகையை திறந்து வைத்தார்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமியின் தோள் மீது செல்போன் ஒன்று திடீரென்று வந்து விழுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் யாருடைய செல்போன் என்று ஆவேசமாக கேட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Shriya Saran sharing her memorable first meeting with Superstar Rajinikanth during Sivaji.

‘சிவாஜி’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரபல நடிகை!

Actor Vishal announcing his directorial debut with the film Magudam / Makutam.

35 ஆண்டுக்கால கனவு நனவானது: இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் விஷாலின் நெகிழ்ச்சியான பதிவுடன் ‘மகுடம்’ உலகளாவிய ரிலீஸ் அப்டேட்!

Poster of Ranbir Kapoor's Ramayana for its theatrical release in China as The Legend of the Prince.

சீனாவில் வெளியாகும் ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’: புதிய தலைப்பு மற்றும் சர்வதேச ரிலீஸ் தேதி அறிவிப்பு!

High budget production update graphic for Mookuthi Amman 2.

ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’: ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை தட்டிதூக்கிய முன்னணி நிறுவனம்!

Ilaya Thilagam Prabhu and Sukanya reuniting in MaryGold.

31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் காம்போ: பிரபு – சுகன்யா ஜோடியின் ‘மேரிகோல்ட்’ பட அறிவிப்பு வெளியீடு!

Promotional media image featuring actor Aadhavan and actress Hasini.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் லிவ்-இன் உறவில் உள்ளேன்: மனம் திறந்த நடிகர் ஆதவன்!