பொதுவாக இப்போது ஏடிஎம் கார்டு இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை அந்த அளவு எல்லாமே டிஜிட்டல் வர்த்தகம் ஆகி விட்டது. ஆனால் நிறைய ஏடிஎம்கள் திறக்கப்படுகிறதே தவிர போதிய பணம் அதில் வைக்கப்படுவதில்லை.
சில நேரங்களில் மணிக்கணக்கில் ஏடிஎம்களில் பணம் வைக்கப்படுவதில்லை. இது ஒரு தவறான முறையாகும்.
கிராமப்புறங்களில் உள்ள ஏடிஎம்களிலும் இன்று பணம் வைத்தால் திரும்ப பணம் வைப்பதற்கு நீண்ட நாட்களாகிறது.
இதை கருத்தில் கொண்ட ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி இனிமேல் பணம் தீர்ந்து 10 மணி நேரத்திற்குள் அந்த ஏடிஎம்ல் பணம் நிரப்பபடவில்லை என்றால் அந்த வங்கிக்கு அபராதம் விதிக்கும் புதிய திட்டத்தை வரும் 1ம்தேதி முதல் அமல்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.







