---Advertisement---

திருப்பதி கோயிலுக்கு நாங்க நெய் சப்ளை பண்ணவே இல்ல… அமுல் நிறுவனம் கொடுத்த விளக்கம்…!

By Sri
Published on: September 21, 2024
---Advertisement---

திருப்பதி கோயிலுக்கு நாங்கள் ஒருபோதும் நெய் சப்ளை செய்யவில்லை என்று அமுல் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு குறித்து மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆந்திரா அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதனிடையே நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மைதான் என்று தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்துவது குறித்த சர்ச்சைக்கு மத்தியில் திருமலை திருப்பதி கோவிலுக்கு நாங்கள் நெய் சப்ளை செய்யவில்லை என அமுல் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு அமுல் நெய் சப்ளை செய்ததாக சில தகவல்கள் ஊடகங்களில் பரவி வரும் நிலையில் தொடர்ந்து அமல் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அமுல் நிறுவனம் கொடுத்த அறிக்கையில் ‘ஐஏஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்ற எங்களின் அதிநவீன உற்பத்தி நிலையங்களில் அமுல் நெய் பாலில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

அமுல் நெய் உயர்தர தூய பால் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. எங்கள் பால் பண்ணைகளில் பெறப்படும் பால் மிகச்சிறந்த முறையில் தயாரிக்கப்படுகின்றது. FSSAI ஆல் கலப்படம் கண்டறிதல் உட்பட கடுமையான தரச் சோதனைகள் மூலம் அனுப்பப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நாங்கள் நெய் சப்ளை செய்ததாக கூறப்பட்டு வரும் தகவல் பொய்யானது’ எனவும் அமுல் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!

Official promotional poster for the sports docu-drama Gladiator featuring Ajith Kumar and Thalapathy Vijay.

அஜித் – விஜய் இணையும் ‘கிளாடியேட்டர்’ ஆவணப்படம்: நவம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!