நடிகர் விஜய் நிதியுதவி செய்ததைப் பாராட்டி பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியுள்ள நிலையில் அதைக் கிண்டல் செய்யும் விதமாக நகைச்சுவை நடிகர் கருணாகரன் ஒரு டிவிட்டைப் பகிரந்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் நிதியுதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் உதவி எதுவும் செய்யவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து கொரோனா நிதியுதவியாக ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதாவது, மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அனுப்பி ஏழை மக்களுக்கு நேரடியாக உதவி செய்யவும் விஜய் கோரியுள்ளதாக தெரிகிறது.
அந்த நிதியில் தமிழகத்துக்கு 50 லட்சமும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி மற்றும் கேரளா அகியவற்றுக்கும் தலா 5 லட்சம் அளித்தார். இந்நிலையில் பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி விஜய் போல மற்ற நடிகர்களும் பாண்டிச்சேரிக்கு நிதி அளிக்க வேண்டும் எனக் கூறி விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.
அந்த வீடியோவைப் பகிரிந்த நகைச்சுவை நடிகர் கருணாகரன் ‘same salary please’ எனக் குறிப்பிட்டு இருந்தார். அதாவது விஜய் போல எனக்கும் சம்பளம் கொடுத்தால் நானும் கொடுப்பேன் எனக் கூறுவது போல தெரிவித்து இருந்தார். இது விஜய் ரசிகர்களைக் கோபப் படுத்தியுள்ளது.







