தமிழக அரசுக்கு சொந்தமாக வெளியூர் செல்லும் வகையில் நீண்ட தூரம் செல்லும் ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன.
கடந்த மே மாதத்தில் இருந்து கொரொனா தொற்று காரணமாக லாக் டவுன் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலும் பஸ்கள் இயங்கவில்லை. பின்பு பஸ்கள் சிறிது சிறிதாக இயங்க அனுமதி அளிக்கப்பட்ட போதும் வெளியூர் செல்ல ஏசி பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அன்றிலிருந்து ஏசி பேருந்துகள் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.













