ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே பெருமாளுக்குரிய பிரம்மோற்சவ விழா திருப்பதியில் களைகட்டி விடும். இந்த நாட்களில் சுவாமியை தரிசிப்பது அவ்வளவு எளிதான விசயமல்ல. கூட்டம் அலைமோதும் திருப்பதி வெங்கடேச பெருமாள் ஸ்வாமி தரிசனம் செய்வதற்கு நிறைய கெடுபிடிகள் இருக்கும்.
சென்னை போன்ற இடங்களில் குடை உற்சவம் நடந்து அந்த குடை திருப்பதி பெருமாளுக்கு கொண்டு செல்லப்படும். இப்படியாக பெருமாளின் சிறப்புகளை பற்றி கூறிக்கொண்டே செல்லலாம்.
இந்த பிரம்மோற்சவ விழா கடந்த 9 நாட்களாக நடைபெற்ற நிலையில் நேற்றோடு கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.













