---Advertisement---

தொடரும் நெல்லை கொடூர கொலைகள்- நாங்குநேரி சம்பவத்தால் மக்கள் அச்சம்

Published on: September 27, 2020
---Advertisement---

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் அந்த ஊரை சேர்ந்த வான்மதி என்ற பெண்ணை கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்துள்ளார். வான்மதியும் நம்பிராஜனும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இருதரப்புக்கும் இத்திருமணம் பிடிக்கவில்லை.

இதில் வான்மதி தரப்பை சேர்ந்த செல்லத்துரை, நம்பிராஜனுக்கு மது வாங்கி கொடுத்து அவரை வெட்டிக்கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளனர். இந்த சம்பவம் கடந்த நவம்பர் மாதத்தில் நடந்தது.

இதற்கு பழிவாங்கும் விதமாக நம்பிராஜன் தரப்பை சேர்ந்தவர்கள் நாங்குநேரியில் ஹோட்டல் நடத்தி வந்த செல்லத்துரையின் அப்பா மற்றும் கடையில் இருந்த ஒருவரை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

வெட்டிக்கொலை செய்த நபர்கள் நேற்று முன் தினம் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளனர். இதற்கிடையே நேரம் பார்த்து காத்து இருந்த எதிர்தரப்பு மீண்டும் நம்பிராஜனின் குடும்பத்தை வெட்டி சாய்க்க நேற்று 15 பேர் கொண்ட ஒரு கும்பல் பகல் 12 மணியளவில் அவர்கள் இருந்த கிராமத்துக்கு வந்துள்ளது. நம்பிராஜனின் தந்தை அருணாசலம் அந்த கும்பலை பார்த்து ஓடியுள்ளார் நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய் என்பவரையும் துரத்தியுள்ளது. தொடர்ந்து வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய அந்த நபர்கள் சண்முகத்தாய் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அதிலேயே இன்னொரு பிரிவாக வந்த கும்பல் ஏற்கனவே செல்லத்துரையின் தந்தை கொலைக்கு உதவி செய்த நம்பிராஜனின் உறவினர் சுப்பையாவின் மனைவி சாந்தியின் வீட்டுக்கு சென்று அவரையும் துடிக்க துடிக்க வெட்டி கொன்றுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் பன்னெடுங்காலம் தொட்டே பழிக்கு பழி கொலைகள், கூலிப்படைகள் அதிகம் செயல்படுவது தொடர்கிறது இதை முதல்வர் எடப்பாடி கவனத்தில் கொண்டு இவர்கள் மீது கடும் நடவடிக்கையை துணிந்து எடுக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியே பதட்டமாக காட்சியளிக்கிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Jiiva and Director M Rajesh during the official project tracking phase of Jolliya Irundha Oruthan movie.

“SMS காம்போ ஞாபகம் இருக்கா?!”.. ஜீவா – இயக்குநர் ராஜேஷ் – யுவன் கூட்டணியின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ ஃபர்ஸ்ட் லுக் டைம் பிக்ஸ்!

Actress Samantha speaking emotionally holding a mic during her upcoming movie press meet at Satyam Theatre Chennai.

“சாய் பல்லவி நோ சொன்னாங்க.. அப்புறம் ஆக்ஷன் சேர்த்து நான் உள்ள வந்தேன்!”.. ‘எங்கள் தங்கம்’ பிரஸ்மீட்டில் சமந்தா ஓப்பனாக உடைத்த உண்மை!

New debut actress Emaya T, daughter of Minister Thangam Thennarasu, interacting smilingly during Heartin movie trailer launch press meet.

“அரசியல் குடும்பமா இருந்தாலும் நான் சூர்யா ஃபேன் தான்!”.. ஓப்பனாக உடைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு மகள் இமயா!

Actress Keerthy Suresh and director Mysskin dressed as professional advocates in courtroom setup from Sathyavan Savithiri movie.

“கோர்ட்டுக்கு வர ரெடியா இருங்க!”.. கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் மோதும் ‘சத்தியவான் சாவித்திரி’ ரிலீஸ் தேதி அவுட்!

Actor Vijay Antony and Ayothi director Mandhira Moorthy discussing the script layout highlighting intense body transformation chart metrics.

“உடல் எடையில் இத்தனை கிலோ குறையப் போறாரா?!”.. விஜய் ஆண்டனி – அயோத்தி இயக்குநர் கூட்டணியில் மிரட்டலான அதிரடி மாற்றம்!

Actor Vishnu Vishal and Bachelor movie director Sathish Selvakumar interacting during a new script narration process.

Vishnu Vishal’s Next? – “நாங்க அனௌன்ஸ் பண்ண படம் டிராப்!”.. விஷ்ணு விஷால் வெளியிட்ட அதிரடி ஷாக் அப்டேட்!