---Advertisement---

பின்னணி பாடியது மட்டுமல்லாமல் பின்னணியும் பேசிய எஸ்.பி.பி

Published on: September 26, 2020
---Advertisement---

எஸ்.பி.பி ஒரு பின்னணி பாடகர் என்பது எல்லோருக்கும் தெரியும் அவர் சில படங்களில் நாயகர்களுக்கு, வில்லன்களுக்கு பின்னணியும் பேசி இருப்பார். ஸ்வாதி முத்யம் என்ற திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிக்க சிப்பிக்குள் முத்துவாக வந்தது. அந்த திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனை தமிழில் டப் செய்து வெளியிட்டனர். அதில் கமல்ஹாசன் டப்பிங் பேச முடியாமல் போகவே எஸ்.பி.பிதான் முழு டப்பிங்கும் கமலுக்காக பேசி இருப்பார்.

இது போல கமல் நடித்த சத்யா படத்தில் வில்லனாக வரும் கிட்டிக்கு எஸ்.பி.பி குரல் கொடுத்திருப்பார். ஒரு வில்லனுக்கு எஸ்.பி.பியின் குரல் பொருத்தமாக இருக்குமா? பொதுவாக வில்லன் என்றால் கொடூரமாக இருப்பார்கள். இப்படத்தில் வரும் வில்லன் கிட்டி அமைதியாக சாந்த சொரூபியாக இருந்துகொண்டே வில்லத்தனம் செய்வார். ஒரு வில்லனுக்கு முதன்முறையாக எஸ்.பி.பியின் அமைதியான குரல் பொருந்தி போனது இந்த படத்தில்தான். இப்படியாக எஸ்.பி.பியின் எவ்வளவோ சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.