---Advertisement---

அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் ரத்து – அதிமுக தலைமை அறிவிப்பு!

By Sri
Published on: May 19, 2020
aiadmk
---Advertisement---

தமிழகத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுக நிரவாகத்தின் இருபெரும் தூண்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராகவும் ஓ.பன்னீர்செல்வமும் பதவிவகித்து வருகின்றனர். அதிமுக தொடர்பான கட்சி முடிவுகள் அனைத்தும் இவர்கள் இருவரும் சேர்ந்து கையாளண்டு வருகின்றனர். அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

இந்நிலையில், அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி, அதிமுகவில் ஒன்றிய அமைப்புகளின் கீழ் செயல்படும் அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர் பொறுப்பு ரத்து செய்யப்படுவதாகவும், ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.