---Advertisement---

குடையோடு வந்தால் மட்டுமே சரக்கு! இப்படி ஒரு கண்டீஷனா?

By Sri
Published on: May 5, 2020
---Advertisement---

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் குடை எடுத்து வருபவர்களுக்கு மட்டுமே ஆல்கஹால் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்திலும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மதுக்கடைகள் திறக்க இருப்பதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் சமூக இடைவெளியை ஒழுங்காக கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் திருப்பூரில் சமூக இடைவெளியைக் கடைபிடித்து குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்கு மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.