வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் மே 7 ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் வெளிநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு அங்கு வேலையும் இல்லாத நிலையில் இந்தியா வருவதற்கு தயாராக உள்ளனர். ஆனால் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் அவர்கள் வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் அவர்களை அழைத்து வருவது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ’வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வரும் 7ம் தேதி முதல் அழைத்து வரப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ளவர்களை கடற்படை கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், வெளிநாட்டில் உள்ள மக்களை கட்டண அடிப்படையில் இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , அவர்களில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே இங்கே வர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்துள்ளது.







