---Advertisement---

வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப அனுமதி! உள்துறை அமைச்ச்சகம் அனுமதி!

By Sri
Published on: April 30, 2020
---Advertisement---

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அனுமதியுடன் சொந்த ஊருக்கு திரும்பலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநில தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடைபயணமாக சென்றது சர்ச்சைகளைக் கிளப்பியது. மேலும் மும்பை ரயில் நிலையம் அருகே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதும் சர்ச்சையைக் கிளப்பியது.

இப்போதைக்கு ஊரடங்கு நீக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் வெளி மாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன் படி தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டவர்கள் அவரவர் மாநிலங்களுக்குத் திரும்ப அனுமதி அளிக்கப்படுகிறது. மாநில அரசுகளால் நியமிக்கப்படும் அதிகாரிகள்  குழுவின் பரிந்துரையின் படி பேருந்துகளில் சமூக இடைவெளியோடு அவர்கள் கொரோனா சோதனை செய்து அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த மாநிலங்களுக்கு சென்றதும் அவர்களை அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதித்து அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தப் படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தமிழக முழு ஊரடங்கு- நடிகர் சித்தார்த் கருத்து

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!