---Advertisement---

திராவிடத் தளபதி விஜய்! புகழ்ந்து தள்ளிய ஆஸ்தான இயக்குனர்!

By Sri
Published on: April 23, 2020
Actor Vijay
---Advertisement---

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான விஜய் கொரோனாவுக்காக நிதியளித்துள்ளதை அடுத்து அவரை இயக்குனர் பேரரசு புகழ்ந்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் உதவி எதுவும் செய்யவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து கொரோனா நிதியுதவியாக ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதாவது,  மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அனுப்பி ஏழை மக்களுக்கு நேரடியாக உதவி செய்யவும் விஜய் கோரியுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து இயக்குனர் பேரரசு தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ஒருவரை அவசரப்பட்டு குறை கூறுவதே, மனிதர்களின் பெருங்குறை!தளபதி தானத்தளபதி என்று மீண்டும் நிரூபித்து விட்டார். திராவிடத்தை நேசிக்கும் தமிழனாய் தளபதி மிளிர்கிறார்! தளபதி விஜய்க்கு தலைவணங்கி நன்றிகள் கோடி! என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் பேரரசு விஜய்யின் சிவகாசி, திருப்பாச்சி ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது விஜய்க்காக ஒரு கதையை தயார் செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!