---Advertisement---

கொரோனா நிவாரணத்துக்கு உண்டியல் பணத்தைக் கொடுத்த சிறுமி! நன்றி தெரிவித்த முதல்வர்!

By Sri
Published on: April 21, 2020
---Advertisement---

கொரோனா நிவாரணத்துக்காக முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ 543 கொடுத்துள்ளார் பள்ளி சிறுமி.

தமிழகத்தில் கொரோன தொற்றைத் தடுக்க வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஏழை எளிய மக்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், பலரும் பசி , பட்டிணியால் வாடுகின்றனர். இவர்களுக்கு அரசும், பல்வேறு சேவை நிறுவனங்களும் மக்களும் உதவி வருகின்றனர்.

இந்நிலையில், திருபுவனத்தைச் சேர்ந்த, ஸ்டார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவி,ஹேம ஜெயஸ்ரீ, கொரொனோ நிவாரணா தொகையாக தான் சேமித்து வைத்திருந்த ரூ.543 –ஐ தனது அப்பாவின் வங்கிக் கணக்கு மூலமாக முதல்வர் ஐயாவுக்கு அனுப்புவதாக ஒரு கடிதம் எழுதி அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டுவிட்டர் பதிக்குக்கு டேக் செய்துள்ளார்.

சிறு வயதிலேயே பிறருக்கு உதவும் உயர்ந்த பண்புடன் நம் குழந்தைகள் வளர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா நிவாரணத்திற்காக, தான் சேமித்து வைத்திருந்த தொகையை வழங்கியுள்ள தஞ்சை – திருபுவனத்தை சேர்ந்த குழந்தை ஹேமஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! என பதிவிட்டுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!