இரண்டாவது முறையாக ஊரடங்கை நீட்டிப்பதாக மோடி வெளியிட்ட வீடியோவை இதுவரை 20 கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கொரோனா காரணமாக மார்ச் 25 ஆம் தேதி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து பிரதமர் மோடி தொலைக்காட்சிகளில் பேசினார். அதன் பின்னரும் கொரோனா தாக்கம் குறையாததால் மீண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி அவர் தொலைக்காட்சிகளில் உரையாற்றி மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தெரிவித்தார்.
மோடியின் அந்த உரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் பட்ட நிலையில் கிட்டத்தட்ட 20 கோடியே 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த தகவலை ஒளிபரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சில் (பிஏஆர்சி) தலைமை நிர்வாகி சுனில் லல்லா தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவுக்குப் பின் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகமாகியுள்ளதாகவும், ஸ்மார்ட் போன் பயன்பாடு 40 சதவீதம் அதிகமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.







