---Advertisement---

தமிழகத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு சேர்ந்துள்ள தொகை எவ்வளவு? வெளியானது தகவல்!

By Sri
Published on: April 15, 2020
---Advertisement---

தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை சுமார் 134 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வந்து சேர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக உள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆகும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவினால் மக்களிடம் நிதியுதவி கேட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இதையடுத்து திரைபிரபலங்களும், தொழிலதிபர்கள் என பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிவாரண உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை வசூலானது எவ்வளவு என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை 134 கோடியே 63 லட்சம் நன்கொடையாக வந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பாக 14 கோடி ரூபாய் வந்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.