இந்தியாவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சில வௌவால்களுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது.
சீன நாட்டில் உள்ள வூஹான் மாகாணத்தில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அங்குள்ள ஒரு கொரொனா வைரஸ் பாதித்த வௌவால் சாப்பிட்ட ஒரு ஆப்பிளை ஒருவர் சாப்பிட்டதால் அவர் மூலமாய் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியதாக தகவல்கள் வெளியாகிறது.
இந்நிலையில் மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக டெல்லியில் உள்ள இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரீசர்ச் நிறுவனம் வௌவால்களிடம் கொரோனோ சோதனை ஆய்வு மேற்கொண்டது. அதில் தமிழகம், கேரளா, இமாச்சல்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளவால்களுக்கு கொரோனா இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை. இந்த தகவலால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.







