---Advertisement---

தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா! பீலா ராஜேஷ் அறிவிப்பு!

By Sri
Published on: April 11, 2020
---Advertisement---

தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை இன்று புதிதாக அறிவிக்கப்பட்ட 58 பேரையும் சேர்த்து மொத்தம் 969 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை மொத்த எண்ணிக்கை 7000 ஐ தாண்டியுள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கையும் 240 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி இன்று அறிவிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று 58 பேருக்கு புதிதாகக் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்வதால் ஊரடங்கு இன்னும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது வரை 8 மருத்துவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 4 பேர் அரசு மருத்துவர்கள் என்றும் 4 பேர் தனியார் மருத்துவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களிடம் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளை ட்ராக் செய்யும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.