https://www.instagram.com/tv/B-hFfE8BQ4L/?utm_source=ig_embed&utm_campaign=loading
உலக அளவில் கொரொனா அச்சத்தால் இந்தியாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
சினிமாவை பொருத்தவரை, அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திரைக்கு வரவிருக்கும் படங்களும் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து நடிகர் சூரி படப்பிடிப்புகள் இல்லாததால் தன் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
நடிகர் சூரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித வீடியோவை எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் ஊரடங்கு உத்தரவு பத்தாம் நாளான இன்று தன் குழந்தைகள் தனக்கு தலைவாரி மேக்கப் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் போதே குழந்தைகளுடன் சேர்ந்து நடிகர் சூரி அடிக்கும் லூட்டியை வாய் குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
https://www.instagram.com/tv/B-hFfE8BQ4L/?utm_source=ig_embed&utm_campaign=loading








