தமிழக அரசின் கோவிட்-19 என்ற வைரஸ் பரவால் உலகமெங்கும் மக்கள் திக்குமுக்காடி உள்ளனர். அனைத்து நாடுகளிலுமே அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியாவிலும் ஏப்ரல் 14 வரை லாக்டௌன் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பொது சுகாதார துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கோவிட்-19 பற்றிய அவசரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக அரசின் இந்த அறிவிப்பு சார்ந்த நடவடிக்கைகளை கடைபிடிக்காத நிறுவனங்களின் அங்கீகாரம் அல்லது அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று முக்கியமான அவசரம் மிகுந்த அறிவிப்பை பொது சுகாதாரத்தின் மூலம் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.







