---Advertisement---

தினமும் 2 மணி நேரம் திறக்கப்படுகிறதா டாஸ்மாக்? அமைச்சர் தங்கமணி சொல்வது என்ன?

By Sri
Published on: March 31, 2020
---Advertisement---

ஊரடங்கால் மூடப்பட்டுள்ள் டாஸ்மாக்குகள் நாளை முதல் தினமும் இரண்டு மணிநேரம் திறக்கப்படும் என்ற செய்திகளில் உண்மை இல்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இரண்டு நாட்கள் மட்டுமே முடிந்துள்ளது.

இந்நிலையில் அதற்குள் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்து அத்திமீறி நுழைந்து மதுபாட்டில்களை திருட முயற்சி செய்துள்ளனர். மேலும் மது கிடைக்காத மன உளைச்சலில் தமிழகத்தில் 5 இடங்களில் குடி நோயாளிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. கேரளாவில் இந்த எண்ணிக்கை 7 ஆக இருக்கிறது. இந்நிலையில் இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக தினமும் 12 மணி முதல் 2 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என ஒரு செய்தி சமூகவலைதளங்களில் பரவின.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தமிழகத்தில் 500 ஐ தாண்டிய கொரோனா எண்ணிக்கை – இன்னும் இரண்டாம் நிலையில்தான் உள்ளதா?

இதுகுறித்து அமைச்சர் பேசியுள்ள மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை அமைச்சர் தங்கமணி ‘ஏப்ரல் 1-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என பரவும் செய்திகள் உண்மையில்லை. அது போன்ற வதந்திகளைப் பரப்புவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவித்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!