---Advertisement---

சிம்புவுடன் இணையத் தயார் – திரௌபதி இயக்குனர் அறிவிப்பு!

By Sri
Published on: March 31, 2020
---Advertisement---

திரௌபதி படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ள இயக்குனர் மோகன் சிம்புவுடன் இணைந்து பணிபுரியத் தயார் எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான திரௌபதி படம் சாதியக் கருத்துகளைக் கொண்டிருந்தாக சொல்லப்பட்டாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2020 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்த படமாக திரௌபதி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப் பட்ட திரைப்படம் 14 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மார்ச் 19 ஆம் தேதியுடன் திரையரங்குகள் மூடப்பட்டதால் திரௌபதி படத்தின் காட்சிகள் முடிவுக்கு வந்தன. இந்நிலையில் திரௌபதி படத்தின் இயக்குனரின் அடுத்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மோகன் ஜி தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். இந்த படத்திலும் ரிச்சர்ட் ரிஷிதான் நடிக்கிறார் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் டிவிட்டரில்,’ சிம்புவுடன் இணைந்து நீங்கள் ஒரு திரைப்படம் எடுத்தால் மாஸாக இருக்கும். நீங்கள் தான் தைரியமான இயக்குநர்… அதுபோல சிம்புவும் தைரியமான இயக்குனர்’ எனத் தெரிவித்திருந்தார். ரசிகருக்குப் பதிலளித்த இயக்குனர் மோகன் ‘ சிம்பு ரெடின்னா நானும் ரெடி. என்னுடைய அடுத்த படத்தை முடித்துவிட்டு சிம்புவிடம் செல்வேன்’ எனக் கூறியுள்ளார்

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Iconic poster of Baahubali 2 featuring Prabhas and Anushka Shetty celebrating its 9th anniversary.

9 Years of Baahubali 2: “இந்திய சினிமாவின் பெருமை!” பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளைத் தகர்த்த பாகுபலி 2-க்கு 9-வது பிறந்தநாள்!

Actor Parthiban holding the 'No Caste, No Religion' certificate issued by Shozhinganallur Tahsildar.

No Caste Certificate: “நான் ஜாதி, மதமற்றவன்!” வட்டாட்சியரிடம் சான்றிதழ் பெற்ற நடிகர் பார்த்திபன்.. நீதிமன்றத்தில் இன்று முக்கிய தகவல்!

Official 2 days to go countdown poster of the movie Kara starring Dhanush, Mamitha Baiju, and Suraj Venjaramoodu.

Kara Release Update: “உழைப்பிற்கு பலன் கிடைக்கும்!” தனுஷின் கர படவேலைகள் முடிந்தது; இயக்குனர் விக்னேஷ் ராஜா கொடுத்த மாஸ் அப்டேட்!

Official announcement poster of Chiyaan 63 alongside director Gautham Vasudev Menon at Madras High Court for Dhruva Natchathiram hearing.

Vikram Double Update: யூடியூபை அதிரவிடும் சியான் 63! மே 27-ல் துருவ நட்சத்திரம் ரிலீஸ்? நீதிமன்றத்தில் கௌதம் மேனன் தாக்கல் செய்த அதிரடி பிரமாணப் பத்திரம்!

Director Aishwarya Rajinikanth on the sets of her upcoming movie Texla with producer Kannan Ravi and composer Yuvan Shankar Raja.

Aishwarya Rajinikanth Next: “குழந்தைகள் படம் டூ மெகா பட்ஜெட் மூவி!” ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘டெக்ஸ்லா’.. களமிறங்கும் அபிஷேக் பச்சன்!

Actor Dhanush and producer Ishari K Ganesh of Vels Film International during their collaboration announcement for the movie Kara.

Dhanush Salary: 35 கோடியிலிருந்து 58 கோடிக்கு ஜம்ப்! ஐசரி கணேஷுடன் தனுஷ் போட்ட ‘மெகா’ பிளான்! ‘கர’ படத்தின் லேட்டஸ்ட் சம்பள விபரம்!