---Advertisement---

தமிழகத்தில் மேலும் 6 பேருக்குக் கொரோனா உறுதி – அதிகரிக்கும் எண்ணிக்கை!

By Sri
Published on: March 27, 2020
---Advertisement---

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்த வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 730-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவால் 29 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் குணமாகியுள்ளனர். மற்ற நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் ஏற்கனவே கொரோனா தொற்றின் மூலம் இறந்தவரின் குடும்பத்தில் மேலும் இருவருக்கும், ஈரோடு மற்றும் சென்னையில் தலா இருவரும் என 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாக சுகாதாரத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Portrait visual of actress Divya Bharathi discussing her career insights.

‘பேச்சிலர்’ படத்திற்குப் பின் வாய்ப்புகள் குறையக் காரணம் இதுதான்: நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்!

Editorial visual representation of Ken Karunas and director Chella Ayyavu's upcoming comedy project.

கென் கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்: இயக்குநர் செல்ல அய்யாவுடன் கூட்டணி!

Visual representation of Keerthy Suresh's special social media post for Nani's The Paradise.

நானியின் ‘தி பேரடைஸ்’ வெளியீடு: கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த வைரல் க்ளிக்ஸ் மற்றும் வாழ்த்துச் செய்தி!

Official launch event visual for actor LK Akshay Kumar's movie #LkAkshayKumar03.

எல்.கே. அக்‌ஷய் குமாரின் புதிய படம் ‘LK Akshay Kumar 03’ பூஜையுடன் தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!