---Advertisement---

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

By Sri
Published on: September 28, 2026
Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.
---Advertisement---

தமிழ் திரையுலகில் தனித்துவமான கதைகளங்களை வழங்கிவரும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ (Dorothy) திரைப்படம் குறித்தான விவாதங்கள் தற்போது இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் மீதான விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கருத்துகள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பதிலளித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் எழும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து அவர் கூறுகையில், “ட்விட்டர் என்பது மிகச் சிறிய உலகம்; அதைச் சார்ந்தவர்களின் கருத்துகளும் இன்னும் சிறியது. ஆனால், சினிமா பார்க்கும் பார்வையாளர்களின் வட்டம் மிகவும் பெரியது. மக்கள் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களையே வழங்கி வருகின்றனர். எப்போது பார்த்தாலும் 4 பேர் ட்வீட் செய்வதைப் பற்றியே கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ஆன்லைனில் சில வன்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால் திரையரங்குகளில் உள்ள ரசிகர்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; மாறாக ஊடகங்கள்தான் இதைக் குறிவைத்து கேள்வி எழுப்புகின்றன” என்று தெரிவித்தார்.

மேலும், திருநங்கைகளின் கதையை மையமாக வைத்துப் படம் எடுக்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், “வன்மம் பரப்புவர்களும் படத்தைப் பார்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன். நல்ல விஷயம் என்னவென்றால், இது ஒரு ஆரோக்கியமான உரையாடலை உருவாக்கியுள்ளது. ஒரு திருநங்கையின் கதை சினிமாவாக வருவதே பிரச்சினையாக இருக்கிறது என்றால், உண்மையில் இது யாருடைய பிரச்சினை? ஒரு திருநங்கைக் கதையைத் திரைப்படமாக ஏற்றுக்கொள்ள முடியாதது நமது சமூகத்தின் உள் பிரச்சினையாகும். மக்கள் இதைப் பார்த்து விவாதம் நடத்த வேண்டும்; அந்த விவாதம்தான் ஒரு தீர்வை நோக்கி அழைத்துச் செல்லும். மாறாக, நான் அவர்களைத் தாக்குவதும் அவர்கள் என்னைத் தாக்குவதும் தொடர்ந்தால் அதில் எந்தப் பயனும் இல்லை” என்று கார்த்திக் சுப்பராஜ் ஆழமாகக் குறிப்பிட்டார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional concept still representing the prison-backdrop thriller drama Jailmates directed by Jagan.

சிறைச்சாலைக்குள் தொடங்கும் எதிர்பாராத நட்பும் மர்மங்களும்! கவனம் ஈர்க்கும் ‘ஜெயில்மேட்ஸ்’ (JAILMATES) டைட்டில் டீசர்!

Promotional still representing the Tamil romantic family drama Marriage Story directed by Sunil Dev.

‘அதோமுகம்’ இயக்குநரின் அடுத்த படைப்பு… விரைவில் திரைக்கு வரும் ‘மேரேஜ் ஸ்டோரி’ டிரைலர் எப்படி இருக்கு?

Actor Siddharth in an intense dramatic still representing his principled stand during the filming of Miss You.

கதாநாயகியை அறைய வேண்டிய காட்சி… மறுத்த சித்தார்த் கோபத்தை வெளிப்படுத்தச் செய்த அதிரடி மாற்றம்!

Veteran actress Jayasudha and actor Kamal Haasan in a classic cinema retrospective collage.

கமல்ஹாசனுடன் திருமணமா? பல ஆண்டு கால வதந்திக்கு சிரித்தபடியே முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஜெயசுதா!

Keerthy Suresh and Mysskin in a courtroom drama promotional still from Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் மோதும் ‘சத்தியவான் சாவித்திரி’ டிரைலர் வெளியானது! நவம்பர் 20-ல் திரைக்கு வரும் கோர்ட்ரூம் டிராமா!

Actor Suriya celebrating the 200 crore worldwide box office milestone of SCENE alongside Nayanthara's Mookuthi Amman 2 update.

ஒரே ஆண்டில் 3-வது 200 கோடி வசூல் சாதனை! பாக்ஸ் ஆபிஸில் ஹாட்ரிக் அடித்து மிரட்டும் சூர்யாவின் ‘சீன்’!