தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களுடன் உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், இயக்குநர் ஜெகன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ டைட்டில் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஜெயில்மேட்ஸ்’ (JAILMATES) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
“சில தொடர்புகள் எதிர்பாராதவை; சில நட்புகள் வழக்கத்திற்கு மாறானவை; சுதந்திரம் முடியும் இடத்தில் சில கதைகள் தொடங்குகின்றன; இந்தச் சுவர்களுக்குப் பின்னால் எதுவும் வெளியே தெரிவது போல் இருப்பதில்லை” என்ற சுவாரசியமான வாசகங்களுடன் இந்த டைட்டில் டீசர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைச் சுவர்களுக்குள் நடக்கும் எதிர்பாராத நட்பு, உணர்வுப் போராட்டங்கள் மற்றும் மர்மங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதை இந்த டீசர் காட்சிகள் உணர்த்துகின்றன.
டைட்டில் டீசர் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் இயக்குநர் ஜெகன் மற்றும் ‘ஜெயில்மேட்ஸ்’ படக்குழுவினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். படத்தின் முதன்மை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரையரங்கு வெளியீட்டுத் தேதி குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.













