தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh), நானி (Nani) நடிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘தி பேரடைஸ்’ (The Paradise) திரைப்படத்தின் வெளியீட்டை ஒட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவுகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா (Srikanth Odela) இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ஆரம்பம் முதலே சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், படம் திரைக்கு வரும் சில மணி நேரங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள வாழ்த்துகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
View this post on Instagram
இது குறித்து அவர் தனது பதிவில், “தி பேரடைஸ் உலகிற்குள் நுழைவதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன! ஜடலின் உலகத்தை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்க நீங்கள் இருவரும் செய்த உழைப்பிற்கு எனது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது ‘தசரா’ (Dasara) படக் குடும்பத்துடன் மீண்டும் இணைந்ததில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இப்படத்திற்குப் புகைப்படங்களை வழங்கியவர்களுக்கும், இசையமைப்பாளர் அனிருத்தின் ‘யெஷனாகுலா’ (Yeshanagula) பாடலின் வைப் பற்றியும் அவர் சிலாக்ப் பாராட்டியுள்ளார். மேலும் ரசிகர்கள் தனது ‘லங்காவோணி’ (Langavoni) உடைகளை ரீல்ஸ் செய்து பகிர்ந்தமைக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.













