---Advertisement---

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

By Sri
Published on: September 17, 2026
நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
---Advertisement---

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் திரைப்படம் ‘மண்டாடி’ (Mandaadi). கடலோரக் கிராமத்துப் பின்னணியில் பாரம்பரியப் படகுப் போட்டி மற்றும் அதிரடி ஆக்‌ஷனை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் திரையுலகப் பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தில் சூரியின் மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகளையும், அவரது அசுர வளர்ச்சியையும் கண்டு வியந்துபோன தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

படத்தில் சூரியின் கடின உழைப்பு மற்றும் ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் மாஸான சண்டைப்பயிற்சிகளைக் கண்டு சிலிர்த்துப்போன ரஜினிகாந்த், அவரைத் தொலைபேசியில் அழைத்து உற்சாகத்துடன் பேசியதாவது: “சூரி.. எப்படி எப்படி எப்படி இதெல்லாம்… ரொம்ப நல்லா இருந்துச்சுங்க! நான் ஃபுல்லா உட்கார்ந்து பாத்துட்டே இருந்தேன், எந்திரிக்கவே இல்ல. என்டயர் டீம்க்கு என்னோட வாழ்த்துகளை சொல்லிருங்க. பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் நம்மளையும்தான் பெண்ட் பண்ணி நிமிர்த்திட்டாரு… உங்களையும்தான் பெண்ட் பண்ணி நிமிர்த்திட்டாரு இல்ல? பென்டாஸ்டிக் வொர்க்.. பென்டாஸ்டிக்!” என்று தனது தனித்துவமான பாணியில் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

திரையுலகின் ஜாம்பவானான ரஜினிகாந்திடமிருந்து வந்த இந்தத் தொலைபேசி அழைப்பு, ‘மண்டாடி’ படக்குழுவினருக்குக் கிடைத்த மிகப்பெரிய மகுடமாகப் பார்க்கப்படுகிறது. நகைச்சுவைப் பாத்திரங்களில் கலக்கிய சூரி, இன்று திரையுலகின் முன்னணி ஆக்‌ஷன் நாயகனாக விஸ்வரூபம் எடுத்துள்ளதை இந்தத் திரைப்படம் நிரூபித்துள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மண்டாடி’ படத்திற்குத் கிடைத்துள்ள இந்த உச்ச நட்சத்திரத்தின் பாராட்டு, படக்குழுவினரை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official character look poster of Suraj Venjaramoodu as 'Dileep' in Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் ரிவீல்: ‘திலீப்’ கதாபாத்திரமாக களமிறங்கும் தேசிய விருது நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு!