---Advertisement---

நடிகர் மோகன் சர்மாவுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனிதநேய செயல்!

By Sri
Published on: August 6, 2026
Superstar Rajinikanth extends financial support to veteran actor Mohan Sharma.
---Advertisement---

தென்னிந்தியத் திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 170-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மூத்த நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மோகன் சர்மா. இவர் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான உடல்நலக் குறைவு மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு அருகில் உள்ள கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் அவர் வசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாயின. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இதனை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உடனடியாகத் தன் தரப்பு மூலம் மோகன் சர்மாவைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரது வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, அடுத்த நாளே மருத்துவச் செலவுகளுக்காக ரூ.1 லட்சம் நிதியை அனுப்பி வைத்துள்ளார்.

ரஜினிகாந்தின் இந்த திடீர் மற்றும் மனிதநேயமிக்க உதவியால் நெகிழ்ந்துபோன மோகன் சர்மா, ரஜினிகாந்தை தனது “உயிர்நாடி” என்றும், தனது மானத்தைக் காப்பாற்றிய கடவுளின் அவதாரம் என்றும் கண்ணீர்ம மல்கக் கூறியுள்ளார். சினிமாவில் பல தசாப்தங்களைத் கடந்த ஒரு மூத்த கலைஞருக்குத் துயரக் காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்துள்ள இந்த உதவிக்கு சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திரையுலகில் சக கலைஞர்களுக்குத் தேவைப்படும் தருணங்களில் ரஜினி தொடர்ந்து கைகொடுத்து வருவது பலமுறை நிருபணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official teaser announcement promotional graphic for Rashmika Mandanna's Mysaa.

ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ டீசர் ரிலீஸ் அப்டேட்: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2 நிமிட அதிரடி மேவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

Official announcement poster for Era Saravanan's socio-drama sequel Nandhan 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!

Official character reveal promotional graphic of Vidya Balan as Kantha and SJ Suryah as Bodhi in Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா: ரஜினியின் மாஸ் படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள்!

Official promotional graphic for the Sri Lankan Tamil film Anthony eyeing the 2027 Oscars.

ஆஸ்கார் களத்தில் இளையராஜாவின் ‘அந்தோனி’: வரலாற்று சாதனை படைக்கத் தயாராகும் முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம்!

Actress Shruti Haasan speaking candidly about PCOS, motherhood, and menstrual health.

“அம்மா ஆகணும், தத்தெடுக்கவும் தயார்!” – மாதவிடாய் வலி மற்றும் தாய்மை குறித்து நடிகை ஷ்ருதிஹாசன் மனம் திறந்த பேச்சு!

Official promotional teaser graphic for Ajith Kumar's motorsports documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டீசர் வெளியீடு: மோட்டார்ஸ்போர்ட் உலகை அதிரவைக்கும் ‘Gladiators: In Pursuit of Challenges’ அதிகாரப்பூர்வ டீசர்!