---Advertisement---

“ரத்தக் கறையோடு களம் இறங்கும் சூப்பர்ஸ்டார்!”.. ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியின் ‘தலைவர் 173’ டைட்டில் இன்று வெளியீடு.. கரியரிலேயே முதல்முறையாக ரஜினி எடுக்கும் அந்த புதிய அவதாரம்!

By Sri
Published on: June 24, 2026
Official announcement poster of Superstar Rajinikanth's Thalaivar 173 produced by Kamal Haasan featuring a blood-stained scalpel knife.
---Advertisement---

தமிழ் திரையுலகின் இருபெரும் தூண்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் பல தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு புதிய திரைப்படத்திற்காகக் கூட்டணி அமைத்திருப்பது ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் ஆவலோடு எதிர்பார்க்க வைத்துள்ளது. ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, கமல்ஹாசன் தனது ‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ (RKFI) மற்றும் மகேந்திரனின் ‘டர்மரிக் மீடியா’ பேனரில் தயாரிக்கும் இத்திரைப்படம் தற்காலிகமாக ‘தலைவர் 173’ (Thalaivar 173) என அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் இன்று (ஜூன் 24, புதன்கிழமை) காலை 10 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இணையத்தில் தற்பொழுது காட்டுத்தீயாகப் பரவி வரும் இந்த புதிய அறிவிப்பு போஸ்டரில், ரத்தக் கறை படிந்த ஒரு கை, மருத்துவர்கள் பயன்படுத்தும் அறுவை சிகிச்சை கத்தியை (Scalpel) ஆக்ரோஷமாகக் பிடித்துள்ளார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் கியூரியாசிட்டியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகின் உள்வட்டாரத் தகவல்களின்படி, இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் தனது நீண்ட கால சினிமா கரியரிலேயே முதல்முறையாக ஒரு பவர்ஃபுல் ‘டாக்டர்’ (5 ரூபாய் டாக்டர்) கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் பிரபல இயக்குநர் மிஷ்கின் மற்றும் மலையாள நடிகர் பசில் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இருப்பினும், இந்த ‘தலைவர் 173’ திரைப்படத்தின் ஆரம்பகட்ட இயக்குநர் தேர்வுகள் கோலிவுட்டில் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்தன. ஆரம்பத்தில் இயக்குநர் சுந்தர் சி தான் இப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ஏற்பட்ட கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக அவர் விலகினார். அவரைத் தொடர்ந்து ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உள்ளே வந்தாலும், அவரும் சில காரணங்களால் ப்ராஜெக்ட்டை விட்டு வெளியேறினார். தற்பொழுது, பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ மற்றும் ‘ஓ மை கடவுளே’ படங்களை இயக்கிப் புகழ்பெற்ற இளம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இந்த பிரம்மாண்ட வாய்ப்பைக் கைப்பற்றி, சென்னையில் ரகசியமாகப் படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகவிருக்கும் ‘ஜெயிலர் 2’ (Jailer 2) திரைப்படத்தின் பணிகளை முழுமையாக முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக இந்த ‘தலைவர் 173’ படப்பிடிப்பில் முழு வீச்சில் இணையவுள்ளார். இது ஒருபுறமிருக்க, நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவரும் ஒரே ஸ்கிரீனில் இணைந்து நடிக்கவிருக்கும் மற்றொரு புதிய மெகா ப்ராஜெக்ட்டும் லைன்-அப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இந்த மெகா த்ரில்லர் படத்தின் இன்று வெளியாகவிருக்கும் டைட்டில் அனௌன்ஸ்மென்ட் குறித்த சினிமா செய்திகள் சோசியல் மீடியா டிராக்கிங் பக்கங்களில் இந்திய அளவில் டாப் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை ஆக்கிரமித்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Tabu as Gawri Hegde in the character glimpse of SlumDog: 33 Temple Road.

மிரட்டலான போலீஸ் அதிகாரியாக மாறும் தபு: ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் கெத்து காட்டும் புதிய கிளிம்ப்ஸ்!

Arun Vijay and director Muthaiya's AV38 movie title and first look announcement.

அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘AV38’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!