---Advertisement---

சுபஸ்ரீ பற்றி விஜய் பேசியதை கட் செய்த சன் டிவி – பின்னணி என்ன?

By Sri
Published on: September 23, 2019
kadambur
---Advertisement---

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ஜெயஸ்ரீ மரணத்தில் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்யாமல் லாரி ஓட்டுனரையும், பேனர் தயாரித்தவரையும் குறை சொல்கிறார்கள் எனக்கூறினார்.

அதேபோல், யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் எனவும் அவர் அதிரடியாக பேசினார். ஆளும் அதிமுக தரப்பினரையே அவர் கூறியிருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். விஜயின் இந்த பேச்சு அதிமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பலரும் எதிர்வினையாற்ற துவங்கிவிட்டனர்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ ‘விஜயின் பேச்சை கேட்டுத்தான் யாரை எங்க வைக்க வேண்டும் என மக்கள் முடிவெடுக்க வேண்டியது இல்லை. பரபரப்பான கருத்தை கூறினால் படம் ஓடிவிடும் என்பதற்காகவே இப்படி பேசி வருகிறார்கள். அவரை முதல்வரிடம் அழைத்து சென்ற பேச வைக்கவில்லை எனில் சர்கார் படமே வந்திருக்காது. அது அவரின் மனசாட்சிக்கு தெரியும். யாரை எங்கு வைக்க வேண்டும் என தெரிந்தே மக்கள் அதிமுக ஆட்சியை அமர வைத்துள்ளனர்’ என அவர் பேசினார். மேலும், அமைச்சர் ஜெயக்குமாரும் விஜயின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

vijay

இந்நிலையில், சுபஸ்ரீ பற்றி விஜய் பேசியது நீக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. பிகில் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சி பிரபல சன் தொலைக்காட்சியில் வருகிற 29ம் தேதி வெளியாகவுள்ளது. அப்போது சுபஸ்ரீ பற்றி விஜய் கடுமையாக பேசிம் காட்சிகள் ஒளிபரப்பாகாது எனக்கூறப்படுகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக தரப்பில் எதிர்ப்பு எழுந்திருப்பதால், பிகில் பட வெளியீட்டின் போது எதாவது பிரச்சனையை எழுப்பலாம் எனக்கருதியே விஜய் மற்றும் தயாரிப்பு தரப்பு இந்த முடிவை எடுத்திருக்காலம் என கருதப்படுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.