---Advertisement---

காலாண்டு விடுமுறை எதிரொலி…. பழனிக்கு படையெடுத்த பக்தர்கள்… குவியம் கூட்டம்..!

By Sri
Published on: September 29, 2024
---Advertisement---

காலாண்டு விடுமுறை எதிரொலியால் பழனி முருகன் கோயிலுக்கு ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள்.

தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடு பழனி. தமிழக மட்டுமில்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகை தருவார்கள். மேலும் தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்காரம் உள்ளிட்ட முக்கிய திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருவார்கள்.

விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் அங்கு திருவிழா கோலம் பூண்டிருக்கும். நேற்று முதல் 10 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பழனிக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் பழனி பேருந்து நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றனர்.

மேலும் படிப்பாதை, யானை பாதை, வின்ச்நிலையம், ரோப் கார் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றது. மலைக்கோவிலில் ஏராளமானவர் திரண்டு இருக்கிறார்கள். பொது தரிசனம், சிறப்பு தரிசனம் போன்றவற்றில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். அதிக அளவில் பக்தர்கள் வந்திருப்பதால் பழனியில் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!