---Advertisement---

அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

By Sri
Published on: September 24, 2024
---Advertisement---

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டி இருக்கும் வடமேற்கு வங்க கடல் பகுதியிலும் வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோர பகுதிகளிலும் ஒரு காற்று தாழ்வு பகுதி உருவாகி இருக்கின்றது. இதனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.

ஏற்கனவே சென்னையில் ஏகப்பட்ட இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கின்றது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், கோவை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது. சென்னையில் இன்று மதியம் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் குளுமையான சூழல் உருவாகி இருந்தது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.