---Advertisement---

லாக்டவுன் அனுபமா பரமேஸ்வரன் நடித்த லாக்டௌன் (Lockdown) திரைப்பட வெளியீட்டு அறிவிப்பு

By Sri
Published on: January 24, 2026
அனுபமா பரமேஸ்வரன் Lockdown படம் போஸ்டர்
---Advertisement---

அனுபமா பரமேஸ்வரன்-யின்  லாக்டவுன் (Lockdown) வெளியீட்டு தேதி குறித்து நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்களுக்கு இப்போது ஒரு முடிவு வந்திருக்கிறது. பல தடவைகள் தள்ளிப்போன பிறகு, லாக்டவுன் (Lockdown) படம் ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே நிம்மதியும், சின்ன ஆவலையும் சேர்த்து கொடுத்திருக்கிறது.

லாக்டவுன் (Lockdown) என்ற பெயரே சொல், நிறைய விஷயங்களை ஞாபகப்படுத்தும். கொரோனா காலத்துல எல்லாரும் அனுபவிச்ச அந்த பயம், தனிமை, மனசுக்குள்ள ஓடின ஆயிரம் கேள்விகள், இந்த எல்லாத்தையும் கதையோட அடிப்படையா வைத்து இந்த படம் உருவாகியிருக்கிறது. கதையின் மையம் ஒரு பெண்ணை சுற்றி நடக்குது. வெளியே உலகம் நிறுத்தப்பட்ட மாதிரி இருந்தாலும், அவளுக்குள்ள வாழ்க்கை நிற்கவே இல்லன்னு சொல்லுற மாதிரி கதை நகரும்னு சொல்லப்படுது.

அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்துல ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க. வழக்கமான க்யூட் ரோல் இல்ல, கொஞ்சம் சீரியஸான, மனசுக்குள்ள உட்காரும் மாதிரியான நடிப்பு இருக்கும் என்பதே எதிர்பார்ப்பு. துணை நடிகர்கள் எல்லாரும் ரியலிஸ்டிக் நடிகர்கள் என்பதால், படம் அதிகம் சினிமா மாதிரி இல்லாம, நம்ம வாழ்க்கை மாதிரியே இருக்கும் என்ற பேச்சும் இருக்கு.

இந்த படம் ஏற்கனவே சில திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதாகவும், அதனால் ஒரு வகை கவனம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. ஜனவரி 30க்கு பிறகு தான் எல்லாம் தெரியும்.

லாக்டவுன் (Lockdown) ஒரு பெரிய ஹிட் ஆகுமா? இல்லையா? என்பது அடுத்த விஷயம். ஆனா அந்த காலத்துல நாம எல்லாரும் அனுபவிச்ச உணர்ச்சிகளை மீண்டும் ஒரு தடவை நினைவூட்டினாலே, அந்த தாக்கம் சும்மா இல்ல.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் 'மிர்சாபூர் தி மூவி' படத்தின் சுவரொட்டி.

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான தொடக்கம்: முதல் நாளில் ரூ.17 கோடியைக் தாண்டி சாதனை படைத்த ‘மிர்சாபூர் தி மூவி’!

Conceptual graphic representing the reported collaboration between actor Suriya and director Mathimaran.

சூர்யாவின் அடுத்த மெகா கூட்டணி: ‘மண்டாடி’ இயக்குநர் மதிமாறனுடன் இணையவுள்ளாரா நடிகர் சூர்யா? – வைரலாகும் தகவல்!

Actress Wamiqa Gabbi emerging as Kollywood's new favorite leading lady.

கோலிவுட்டின் புதிய ஃபேவரைட் வாமிகா கபி: விஷால் மற்றும் சூர்யா படங்களுடன் ஹாட்ரிக் ஹிட் – முழு விவரம்!

Director Shiva Nirvana addressing recent cinematic collaboration rumors.

தனுஷ் இயக்கத்தில் புதிய படமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் శిவ நிர்வாண!

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!