---Advertisement---

தமிழ்ல பேசுறத அவமானமா நினைக்காதீங்க… கெஞ்சி கேட்கிறேன்… செல்வராகவனின் திடீர் வீடியோ…!

By Sri
Published on: September 23, 2024
---Advertisement---

தமிழில் பேசுவதை அவமானமாக பார்க்காதீர்கள் என்று செல்வராகவன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்தவர் செல்வராகவன். அவர் தற்போது படங்களை இயக்குவதை விட்டுவிட்டு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார் செல்வராகவன். அவ்வபோது சமூக வலைதள பக்கங்களில் சில கருத்துக்களை பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது புதியதாக ஒரு கருத்தை பகிர்ந்து இருக்கின்றார்.

அதில் தமிழ் மொழியில் அனைவரும் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கின்றார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது ‘தமிழ்நாட்டு மக்களை நான் கெஞ்சி கேட்கின்றேன். தமிழ் மெல்ல மெல்ல சாகும்னு பாரதியார் சொன்னாரு.. அது எந்த அளவுக்கு உண்மை. அப்படின்னா இப்போ தமிழ் ஐசியூல வென்டிலேட்டர்ல இருக்கு. தமிழ் பேசுறத அவமானமா நினைக்கிறாங்க.

எனக்கு இங்கிலீஷ் பேசுவது ஒரு அவசியம் புரியுது. ஸ்கூல் காலேஜ்ல இங்கிலீஷ் பேச முடியாம நான் எவ்வளவோ முறை அவமானப்பட்டு இருக்கேன். கூனிகுறுகி இருக்கேன். ஃபுல் கிளாஸே இங்கிலீஷில பேசும் எனக்கு மட்டும் இங்கிலீஷ் தெரியாது. இங்கிலீஷ் தெரியாமல் எப்படி கடைசி பெஞ்சில் இருந்து படிச்சிட்டு வெளியே வந்துட்டோம். அதுக்கு பிறகு தான் ஒரு வெறி வந்துச்சு.. என்ன பெரிய இங்கிலீஷ் நம்மளும் கத்துக்கணும் நினைச்சேன்.

இந்தியன் எக்ஸ்பிரஸ், இங்கிலீஷ் புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். அர்த்தம் தெரியாததற்கு டிக்ஷனரிய வச்சு அர்த்தம் தெரிஞ்சிக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா கஷ்டப்பட்டு பேச ஆரம்பித்தேன். சினிமாவுக்கு வந்த பிறகு ஓரளவுக்கு நல்லாவே பேசத் தொடங்கிட்டேன். ஆனாலும் எங்க போனாலும் தமிழ்ல தான் பேசுவேன். நீங்களும் எங்க போனாலும் தமிழ்லயே பேசுங்க, தலை நிமிர்ந்து பேசுங்க..

உங்கள தமிழ்ல பேசுறது பார்த்து அவமானப் படுத்தினா முறைச்சு பாருங்க. தமிழ்ல பேசுவதை ஃபிகர் அவமானமாக பார்த்தால் அப்படிப்பட்ட பிகரே தேவையில்லை. தமிழ்ல பேசுற தமிழ்நாட்டு பொண்ணே போதும். உலகத்துல எந்த நாட்டுக்கு வேணாலும் போங்க. அங்க அவங்க அவங்க தாய் மொழியில் தான் பேசுவாங்க.

இங்கிலீஷ்காரனே தமிழ கத்துக்கிட்டு தமிழ்ல பேசுறத பெருமையா நினைக்கிறான். உலகத்திலேயே ரொம்ப பழமையான மொழி தமிழ் உங்களுக்கு என்று கேட்கிறேன். காலம் காலமா மனசுல இருந்தது உங்ககிட்ட ஷேர் பண்ணி இருக்கேன்’ என்று அவர் கூறியிருந்தார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Yash during an interview discussing his upcoming movies Toxic, Ramayana, and KGF 3.

YASH on KGF 3 : இப்போதைக்கு ‘ராக்கி பாய்’ வரமாட்டார்! – கேஜிஎஃப் 3 தாமதமாவது ஏன்? யஷ் விளக்கம்!

Director S.A. Chandrasekhar speaking during an interview about actor Vijay's Jananayagan movie leak.

VIJAY Jananayagan Leak : “எதிர்க்கட்சிகள் வேலையாக இருக்கலாம்!” – ஜனநாயகன் கசிவு குறித்து எஸ்.ஏ.சி பகீர் பேட்டி!

Music composer Sai Abhyankkar posing with a simple look during a press interaction.

SAI ABHYANKKAR Interview : “விமர்சனங்கள் வளர்ச்சிக்குத் தான்!” – நோக்கியா போன் பயன்படுத்தும் சாய் அபயங்கர்! ஏன் தெரியுமா?

Actress Ketika Sharma smiling and expressing gratitude to Tamil cinema fans.

KETIKA SHARMA on Tamil Fans : “மொழி பாகுபாடு பார்ப்பதில்லை!” – தமிழ் ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய கெட்டிகா சர்மா!

Official release date poster of Jr NTR and Prashanth Neel's movie NTRNeel scheduled for June 11, 2027.

NTRNeel : “ஜூன் 11, 2027-ல் என்டிஆர் ராஜ்யம் ஆரம்பம்” – பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு; மே 20-ல் வெளியாகிறது மாஸ் ப்ரோமோ!

Actor Siddharth and Actress Trisha together in a promotional still for their 4th collaboration.

SIDDHARTH – TRISHA Reunion : 10 வருஷம் ஆச்சு! – மீண்டும் ஜோடி சேரும் சித்தார்த் – திரிஷா! எத்தனாவது படம் தெரியுமா?