மகனின் பிறந்த நாள் விழாவில் தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
சமீப நாட்களாக சாதாரணமாக இருக்கும் மனிதர்கள் திடீர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இளைஞர்கள், குறைந்த வயது உடையவர்களும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது பொது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்நிலையில் குஜராத்தில் தனது 5 வயது மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தாய் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. வல்சாத் மாவட்டம் பாபி நகரில் உள்ள ஷர்வாடா பகுதியில் வசிக்கும் தாவல் பரோட் – யாமினிபென் தம்பதியினர் தனது 5 வயது மகனின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்கள்.
கடந்த 14 ஆம் தேதி சனிக்கிழமை அங்குள்ள ஹோட்டலில் கொண்டாடியுள்ளனர். மேடையில் தனது மகனுடன் மகிழ்ச்சியாக இருந்தாய் யாமினிபென் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்து இருக்கின்றார். உடனடியாக அவரின் கணவர் மற்றும் உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
இந்த சம்பவம் அவர்கள் குடும்பத்தின் இடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இது தொடர்பான சிசிடிவி கட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் மேடையில் தனது மகனுடன் யாமினி மகிழ்ச்சியாக இருந்து வந்தார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவரிடம் தனது கையில் இருந்த மகனை கொடுத்துவிட்டு நெற்றியில் கை வைக்கின்றார். பின்னர் கணவனின் தோலை பற்றி பிடிக்க முயற்சி செய்தபோது முடியாமல் சரிந்து விழுந்த காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்று இருக்கின்றன.













