---Advertisement---

திருமணத்திற்கு முன்பு மணமகளிடம் கையெழுத்து… நண்பர்கள் செய்த சேட்டை… வைரலாகும் புகைப்படம்…!

By Sri
Published on: September 17, 2024
---Advertisement---

மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு மணமகனின் நண்பர்கள் செய்த சேட்டை தொடர்பான வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திருமணம் முடிந்துவிட்டாலே அந்த பையனுக்கு கால் கட்டு போட்டாச்சு என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை. திருமணத்திற்கு முன்புவரையில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுற்றித்திரிந்த பலர் திருமணத்திற்கு பிறகு வேலை, வீடு, குடும்பம் என்று தொடர்ந்து ஒரு சிறிய வட்டத்திற்குள் முடங்கி விடுகிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு ஊர் சுற்றியது போலவும் நண்பர்களுடன் ஜாலியாக விளையாடியது போலவும் எங்கேயும் செல்ல முடிவதில்லை. ஏனென்றால் மனைவிமார்கள் அனுமதி கொடுப்பதில்லை என்று பலரும் புலம்புவது உண்டு. மனைவிமார்கள் கணவர்கள் எங்கேயாவது செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டால் போதும் உடனே எங்க போறீங்க.. பேசாம வீட்ல இருங்க என்று அதற்கு அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்து விடுகிறார்கள் என்று கணவன்மார்கள் தவிக்கும் நிலைமை உருவாகி இருக்கின்றது.

இது போன்ற சிக்கல் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக தற்போது திருமணமான மாப்பிள்ளைக்கு தடை போடக்கூடாது என்று மணப்பெண்ணிடம் அவரின் நண்பர்கள் பத்திரத்தில் எழுதி வாங்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. தென்பாதி கிராமத்தை சேர்ந்த நபர் முத்துக்குமார். இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார்.

இவருக்கும் குறிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் திருமணம் செய்யப்பட்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்ற நண்பர்கள் முத்துக்குமாருக்கு திருமணமானதால் அவரை முன்பு போல் சுதந்திரமாக வெளியில் சுற்ற முடியாது என்று யோசித்த நண்பர்கள் நூறு ரூபாய் பத்திரம் ஒன்றை ரெடி செய்து திருமணத்திற்கு பிறகு எப்போதும் போல் நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் செல்வதற்கும் சுற்றுலா செல்வதற்கும் தடை விதிக்காமல் நண்பர்களுடன் சந்தோஷமாக வெளியில் சுற்றுவதற்கு தடையாக இருக்கும் என்று கூறி மணப்பெண் இடம் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். திருமணம் முடிந்த கையோடு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வந்தது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Sundeep Kishan and director Jason Sanjay discussing the Sigma movie project.

இதுதான் ஜேசன் சஞ்சய்யின் அதிரடி முடிவு! ‘சிக்மா’ படத்தைப் பாராட்டிய சந்தீப் கிஷன்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

Vishnu Vishal and Aishwarya Lekshmi in the song sequence of Gatta Kusthi 2.

இது விஷ்ணு விஷாலின் வேற லெவல் என்ட்ரி! ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பாடல் வெளியீடு.. செம துள்ளலான காட்சியமைப்பு!

Chiyaan Vikram in a still from the movie Dhruva Natchathiram.

ரசிகர்களுக்கு மீண்டும் காத்திருப்பு! ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்க்கு ஜூலை 31 வரை கெடு.. உயர்நீதிமன்றம் கொடுத்த புதிய வாய்ப்பு!

Director Sudha Kongara outside the Madras High Court regarding her salary dispute.

8.39 கோடி சம்பள பாக்கி! தயாரிப்பாளரை மிரள வைத்த சுதா கொங்கரா.. ‘இதயம் முரளி’ ரிலீஸ் ஆகுமா? கோர்ட் கொடுத்த செக்!

Director Mani Ratnam with Vijay Sethupathi and Sai Pallavi.

இது மணிரத்னத்தின் பெஸ்ட் கோம்போ! விஜய் சேதுபதி – சாய் பல்லவியுடன் இணையும் ஏ.ஆர். ரஹ்மான்.. ஜூலை 5-ல் தொடங்கும் பிரம்மாண்ட பயணம்!